Atctamil
உறுதியானது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நாள்
பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.
கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பிரதமர் பார்வையிட்டதுடன், அங்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ஹரினிக்கு கல்லூரியின் அதிபரால் நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உறுதியானது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நாள்
முன்னாள் அமைச்சர் வியாழந்திரன் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது
மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் - பருத்தித்துறை சுயேட்சை குழு கோரிக்கை