Atctamil
மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் - பருத்தித்துறை சுயேட்சை குழு கோரிக்கை
முன்னாள் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சரும், சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திசாநாயக்க (Navin Dissanayake) ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (14) இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், இங்கிலாந்தின் மிடில் டெம்பிளில் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான நவீன் திசாநாயக்க, முன்னைய அரசாங்க நிர்வாகங்களில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
ஒரு முக்கிய அரசியல் பிரமுகரான திசாநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான மறைந்த காமினி திசாநாயக்கவின் மகனாவார்.
மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் - பருத்தித்துறை சுயேட்சை குழு கோரிக்கை