Atctamil
உறுதியானது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நாள்
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) இலங்கையில் பணத்தை எவ்வாறு செலவிட்டது என்பதை விசாரிக்க ஒரு தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதமரும் இந்த சர்வதேச அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட தெரிவுக்குழுவை அவசரமாக நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து ஒரு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், அதன்படி குழு நியமிக்கப்படுமா இல்லையா என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், இலங்கையில் இயங்கும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அரசு சாரா நிறுவனங்களை (என்ஜிஓ) விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அத்தகைய தேர்வுக் குழு நியமிக்கப்பட்டால், தனது கட்சியான சிறிலங்க பொதுஜன பெரமுனவின் ஆதரவையும் வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறனதொரு பின்னணியில், USAID நிறுவனத்தின் பணம் இலங்கையில் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை விசாரிக் குழு நியமிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உறுதியானது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நாள்
முன்னாள் அமைச்சர் வியாழந்திரன் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது
மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் - பருத்தித்துறை சுயேட்சை குழு கோரிக்கை